அதிமுக சார்பில் வரும் 20-ம் தேதி கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி..!

ADMK, the Convention Christmas Festival is scheduled to be held on the 20th Sunday at 5 pm at the Nandambakkam Chennai Trade Center.

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கான்வென்ஷன் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்து இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும். கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என முதல்வர், துணை முதல்வர் இருவரும் தெரிவித்துள்ளனர்.