உரிய நேரத்தில் ஜீவனாம்சம், இல்லையெனில் கடும் நடவடிக்கை – ஐகோர்ட் உத்தரவு
ஜீவனாம்சம் வழங்க தவாறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஜீவனாம்சம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜீவனாம்சம் வழங்க தவாறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி விவாகரத்து கோரி சேலம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், மனைவி தனத்துய குழந்தையுடன் ஓசூரில் உள்ள பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
போதிய வருவாய் இல்லாததால் வழக்கை ஓசூருக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையில், ஜீவனாம்சம் கோரிய மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் நீண்டகாலம் நிலவையில் உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தம்பதி இடையேயான பிரச்சனையால் குழந்தைகளின் உரிமைகள் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். குழந்தையின் தாயின் வழக்கை முறையை கருதி இடைக்கால ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிடலாம் எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும், ஜீவனாம்சம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, பெண்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைகளை சுட்டிக்காட்டி வழக்கை ஓசூருக்கு மாற்றி ஆணையிட்டனர்.