ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பிற்க்காக  அனைத்து துறைகளும் தயார்...!திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி

திருச்சி மாவட்டத்தில் ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பிற்க்காக  அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பிற்க்காக  அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி  கூறுகையில்

திருச்சி மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது.ஏரி, குளம், கண்மாய் மற்றும் காவிரி ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மழை காரணமாக, முக்கொம்பு தற்காலிக தடுப்பணையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், விவசாயிகள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

அதேபோல் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர், இலவச தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 0431-2418995 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும்  திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.