அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட வேண்டும் – பீட்டர் அல்போன்ஸ்

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்கும் வண்ணம், தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுதலங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், முதலமைச்சரின் பெருமுயற்சி மற்றும் அனைத்து அரசு துறைகளின் கடுமையான உழைப்பின் காரணமாக கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
முதலமைச்சரின் பெருமுயற்சி & அனைத்து அரசு துறைகளின் கடுமையான உழைப்பின் காரணமாக கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுள்ளேன்!c pic.twitter.com/AuBqZkyr5G
— S.Peter Alphonse (@PeterAlphonse7) September 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025