திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இதற்கு இடையில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும்.
தடுப்பு நடவடிக்கைகளுக்கு இப்போது அதிமுக அரசு ஒதுக்கியுள்ள 3280 கோடி ரூபாய் நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…