அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து!

Union Home Minister Amitabh Bachchan is scheduled to return to Chennai on the 14th, but his visit has been canceled.

கடந்த வருடம், நவ.21 ம் தேதி சென்னை வந்தார். அதனை தொடர்ந்து, வரும் 14-ம் தேதி மீண்டும் சென்னை வருவதாக கூறப்பட்ட நிலையில், அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், கடந்த வருடம், நவ.21 ம் தேதி சென்னை வந்தார். அதனை தொடர்ந்து, வரும் 14-ம் தேதி மீண்டும் சென்னை வருவதாக கூறப்பட்டது.

இவர் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வருவதாக கூறப்பட்டது. மேலும், இந்த வருகையின் போது, முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக – பாஜக இடையே பிரச்சனை உள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு குறித்து பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தற்போது அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.