அ.ம.மு.கவின் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குல.சண்முகநாதன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவினரால் ஓரம்கட்டப்பட்ட டி.டி.வி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் துவங்கிச் செயல்பட்டு வருகிறார். இந்த கட்சியில் செந்தில் பாலாஜி. அவருக்கு தினகரன் தரப்பில் சகல மரியாதைகளும் கொடுக்கப்பட்டு வந்தது.
unknown nodeஆனால் அவர் திடீரென்று அமமுகவிலிருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து இன்று அ.ம.மு.க. புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குழ.சண்முகநாதன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார்.
. இதையடுத்து அ.ம.மு.க சிறப்பில் வெளியான செய்திக்குறிப்பில், கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், குழ.சண்முகநாதன் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
unknown node