திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை அருகே வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை பகுதியில் இன்று மதியம் வேன் ஒன்று மிகவும் வேகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், கட்டுபாட்டை இழந்த அந்த வேன் பைக் ஒன்றின் மீது மோதி அந்த வேன் அருகில் இருந்த பேக்கரிகுள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் பைக்கில் சென்றவர் மற்றும் கடையிலிருந்த 2 பேர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
