புதுக்கோட்டை அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 பேர் கோவிலுக்கு சென்று விட்டு வேனில் திரும்பி கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நெடுஞ்சாலையில், வேன் மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியது.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் திருமயம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.