மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மாரத்தான் போட்டி காலை 4 மணிக்கு மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் 4 பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மாரத்தான் போட்டியின் தொடக்க நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
1,063 திருநங்கைகள், திருநம்பிகள் உட்பட 73ஆயிரம் பேர் மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
1,063 திருநங்கைகள், திருநம்பிகள் உட்பட 73 ஆயிரம் பேர் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றனர், மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மாரத்தானில் வென்றவர்களுக்கு 9 பிரிவுகளில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ரூ.3.42 கோடி வசூலானது. வசூலான பணத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.