பண்ட் அவுட் ஆனார் போட்டி மாறிடுச்சு! தோல்வி குறித்து கில் ஸ்பீச்!

ஜடேஜா தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக நிதானமாக ஆடினார் என போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் கில் பாராட்டி பேசியுள்ளார்.

shubman gill and rishabh pant

லண்டன் :  ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முடிந்தது. போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து போட்டியில் தோல்வியை சந்தித்தது. இது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாகவும் அமைந்தது.

போட்டி முடிந்த பிறகு அணியின் கேப்டன் கில் தோல்வி குறித்து சில விஷயங்கள் தான் போட்டியை மாற்றிய காரணம் என மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பந்தின் ரன் அவுட் ஆட்டத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. இது எங்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. அந்த நேரத்தில் பண்ட் அவுட் ஆகவில்லை என்றால் அவர் இன்னும் சிறிது நேரம் களத்தில் இருந்திருப்பார். போட்டியின் போக்கு அப்படி மாறியிருக்கும். ஆனால், அவர் ஆட்டமிழந்த நிலையில் என்ன ஆனது என்றே புரியவில்லை” என்று கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசுகையில், ரவீந்திர ஜடேஜா, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 61 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) எடுத்து சிறப்பாக ஆடினார் என பாராட்டினார்.  கில் இது குறித்து பேசுகையில், “ஜடேஜாவுக்கு நாங்கள் இப்படி விளையாடுங்கள் அப்படி விளையாடுங்கள் என எந்த தகவலும் சொல்லவில்லை. ஆனால் அவர் தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக நிதானமாக ஆடினார். அவரது ஆட்டம் எங்களுக்கு நம்பிக்கை அளித்தது,” எனவும் பாராட்டி பேசினார்.

அதே சமயம், “இலக்கு பெரியதாக இல்லை, ஒரு நல்ல கூட்டணி அமைத்தால் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பினோம். ஆனால், அந்த ரன் அவுட் எங்களை பின்னுக்குத் தள்ளியது,”  எனவும்,“ஐந்து நாட்களும் எங்களது முழு திறனை வெளிப்படுத்தி ஆடினோம். தோல்வி ஏமாற்றமளித்தாலும், எங்கள் முயற்சியை எண்ணி பெருமை கொள்கிறோம்,” எனவும் கில் தெரிவித்தார். மேலும், இந்த தோல்வியால் இந்தியா, ஆண்டர்சன்-டெண்டுல்கர் ட்ரோபி தொடரில் 2-1 என்று பின்தங்கியுள்ளது. இந்தப் போட்டியில், இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வியை தொடர்ந்து நான்காவது போட்டியில் வெற்றிபெறவேண்டும் என இந்திய அணி தயாராகி கொண்டு இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 4-வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஜீலை 27-ஆம் தேதி வரைமான் செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்