#Breaking:கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேருந்து ஓட்டுநர் கைது!

Anbuchelvan, the driver of the bus, was also arrested on a complaint that the conductor had sexually harassed a college student.

கல்லூரி மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் பேருந்தின் ஓட்டுநர் அன்புச்செல்வன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் பயணம் செய்த 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துனர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால், தனியாக அமர்ந்திருந்த போது மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில்,நடத்துனர் சிலம்பரசனை கானை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்,மாணவிக்கு பாலியல் கொடுத்த புகாரில் பேருந்தின் ஓட்டுநர் அன்புச்செல்வன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.