ஒரே குடும்பத்தில் 3 பேர் மீது ஊழல் வழக்குகள்… ப.சிதம்பரம் மீது அண்ணாமலை குற்றசாட்டு.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , அண்மையில் ராமேஸ்வரத்தில் இருந்து என் மண் என் மக்கள் எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் காரைக்குடி வந்த போது கட்சி கூட்டத்தில் பேசுகையில் ப.சிதம்பரம் பற்றி விமர்சனம் செய்து இருந்தார்.
அவர் கூறுகையில், இந்தியாவிலேயே ஊழல் வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் என அமலாக்கத்துறையால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் குடும்பத்தை தான் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
முன்னதாக திமுகவினர் நடைபயணம் மேற்கொண்டால் என் மகன் என் பேரன் என பெயர் வைப்பார்கள் என அண்ணாமலை விமர்சித்து இருந்தார்.