திருப்பூர் மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டதில் உள்ள நொய்யல் ஆற்றில் இறங்கி குளிப்பதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 7 மாணவர்கள் இன்று அங்கு சென்று உள்ளனர். சந்துரு (12), இனியன்(10) ஆகிய இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதியில் சேற்றில் அந்த இரண்டு மாணவர்களும் சிக்கி உள்ளனர். அப்போது அவர்களுடன் சென்ற சக மாணவர்கள் இந்த இரண்டு பேரையும் மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. பிறகு அவர்கள் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளனர்.
பிறகு உதவிக்காக அங்கு சென்றவர்கள் ஆற்றில் சிக்காமல் இருந்த 5 பேரை மீட்டனர். மேலும் அந்த இரண்டு பேரை மீட்க முயற்சி செய்ய போது அவர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இறந்த அந்த 2 பள்ளி மாணவர்களின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குளிக்க சென்ற மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்போல கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, கல்வடங்கம் கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற தனியார் கல்லூரியில் படித்து வந்த 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.