#GoBackmodi என எதிர்ப்பு தெரிவிப்பதின் பின்னால் தேச விரோதிகள் உள்ளனர் – எல்.முருகன்

Tamil Nadu BJP leader L Murugan has said that there are anti-national elements behind the protest as Go Back Modi.

Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பாஜக தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு உலக பொருளாதாரம் சார்ந்தது. அது விரைவில் குறையும் என்றும் கூறியுள்ளார். இந்த தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜகவிற்கு முக்கிய தேர்தலாக நினைத்து பணிபுரிகிறோம். இரட்டை இலக்கத்தில் தமிழக  சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அமர்ந்திருப்பார்கள்.

முக ஸ்டாலின் எந்த காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது. அவரது முதல்வர் ஆசை கனவாக தான் இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயரும், ரவுடியிசம் அதிகரிக்கும் என்பது மக்களுக்கு தெரியும். ராகுல் காந்தி, செல்லும் மாநிலங்களில் எல்லாம் தோல்வி தான் கிடைத்து வருகிறது. மேலும், பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.