தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.