குரங்கணி தீ விபத்த்தின் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு...!!

Anuvithya from Chennai in the fire accident shortly before death; The death toll rose to 14.

தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று வரை தீ விபத்தில் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது கணவர் விபின் சம்பவதன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று வரை பலி எண்ணிக்கை 12யாக இருந்தது.

மேலும் தற்போது குரங்கணி தீ விபத்து சென்னையை சேர்ந்த அனுவித்யா சற்று முன் உயிரிழந்துள்ளார். இதனால் குரங்கணி தீ விபத்த்தின் பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.