அர்ச்சகர்கள் நியமனம் – தமிழக அரசு பதிலளிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவு!

The High Court ordered that the status quo should continue without any change in the appointment of priests.

அர்ச்சகர்களை நியமிப்பதில் எந்த மாறுதலும் இன்றி தற்போதைய நிலையே தொடரவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.

கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகம விதியை மீறி அர்ச்சகர்களை நியமிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், ஆகஸ்ட் 25க்குள் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.