தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை.., பயிலுதவி தொகை ரூ.5,000 – தமிழக அரசு அறிவிப்பு!

Applications are invited for the two year Full Time Masters Diploma in Archeology offered by the Department of Archeology, Government of Tamil Nadu.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வழங்கும் இரண்டாண்டு முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு.

2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ள இரண்டு ஆண்டு காலை முழுநேர தொல்லியியல் முதுநிலை பட்டாய படிப்பிற்கு (Post Graduate Diploma in Archaeology) 2021-23 ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி:முதுநிலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்றும் மொத்தம் இடம் – 20, பயிற்று மொழி – தமிழ் மற்றும் ஆங்கிலம் எனவும் தெரிவித்துள்ளனர்.

பயிலுதவித் தொகை:ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பதாரர் பெயர். முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கல்வித்தகுதி, இனம் மற்றும் நிழற்படம் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பத்தினை நிறைவு செய்து கல்விச்சான்றிதல்கள் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகலுடன் இணைத்து அனுப்பி வைக்கவேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:விண்ணப்பிக்கும் மாணவர்கள் கொள்குறி எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள்www.tnarch.gov.inஎன்ற தொல்லியல் துறை இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். இதனை கிளிக் செய்துhttps://www.tnarch.gov.in/sites/default/files/Application%20Form_1.pdfவிண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:ஆணையர் (மு.கூ.பொ), தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை-600008. தொலைபேசி எண் 044-28190020, மின்னஞ்சல் முகவரி-tnarchioa2021batch@gmail.com விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 16ம் தேதி மாலை 5 மணி வரை என்று அறிவிக்கப்பட்டள்ளது.