மாணவர்களே ரெடியா..? நாளை முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.!

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம்13-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதனை தொடர்ந்து 11-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் நாளை முதல் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கப்படவுள்ளது.

அதன்படி, நாளை (எப்6) முதல் எப் (20) வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 6- தமிழ், ஏப்ரல் 10 – ஆங்கிலம், ஏப்ரல் 13- கணிதம், ஏப்ரல் 15- விருப்ப மொழி பாடம், ஏப்ரல் 17- அறிவியல், ஏப்ரல் 20- சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன.

மேலும், இந்த பொது தேர்வை 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், கண்காணிப்பாளர்களும் தேர்வு அமையத்துக்கு கைப்பேசி கொண்டுவர தடை அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.