சேலம், திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரர் கோவில் சிசிடிவி கேமிரா சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என தண்டனை பெற்ற யுவராஜ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
சேலம் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடந்த கோகுலராஜ் என்பவரது கொலை சம்பவம் தொடர்பாக யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றக்கிளை ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் யுவராஜ் தரப்பு வாதிடுகையில், கொலை சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரர் கோவில் பகுதியில் மொத்தம் 8 சிசிடிவி கேமிராக்கள் இருக்கின்றன.
ஆனால் அவற்றில் 2 சிசிடிவி கேமிராக்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன. அவையும் சரியாக ஆய்வு செய்யப்படாமல் எங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என வாதிட்டனர். இதனை கேட்ட நீதிபதிகள், நாங்கள் ஏற்கனவே ஜனவரி 22ஆம் தேதி கோவில் அமைப்பை ஆய்வு செய்ய உள்ளோம். அப்போது சிசிசிடிவி குறித்து ஆய்வு செய்யவும் இருக்கிறோம் என கூறி இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.