தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து அல்லது வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என பலருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என சோதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே போல, அரியலூர் மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள அறக்கட்டளை எனும் ஊரை சேர்ந்த 60 வயதான நாராயணசாமி என்பவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு திரும்பி வசித்து வந்துள்ளார். அவருக்கு அண்மையில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 6ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி வைத்து கடந்த 7ஆம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தனிமையில் அந்த முதியவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்று தான் சிகிச்சை பெற்று வந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வெளியாகியுள்ளது.