ரஜினிகாந்த் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி நியமனம்!

Rajinikanth announced Arjuna Murthy, who was the head of the BJP's intellectual wing, as his party's chief coordinator.

பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார் ரஜினிகாந்த்.

நான் அரசியலுக்கு விரைவில் வருவேன் என நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே வந்த நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்… நிகழும் என தெரிவித்துள்ளார்.

இதனால் ரஜினி ஜனவரியில் கட்சி ஆரமிப்பார் என அந்த பதிவில் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிவரும் அவர், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் நேரம் வந்துவிட்டது எனவும், கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லையென தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தான் ஆரமிக்கும் கட்சிக்கு பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியணை அறிவித்துள்ளார்.