பரபரப்பு!!அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

கைதான அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் 156 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தரகர்கள், டேட்டோ எண்ட்ரி ஊழியர்கள் என 10 பேர் கைதானார்கள். ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், கைதான அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் 156 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தரகர்கள், டேட்டோ எண்ட்ரி ஊழியர்கள் என 10 பேர் கைதானார்கள். ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம், பள்ளிக்கல்வித்துறை ஊழியரான விநாயகமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், இதுவரை 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.