5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்.
வெயில் அதிகரிக்கும் :
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், வரும் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
மேலும், இந்த மாதம் வெப்பநிலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 7,8,9,10,11 ஆகிய 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு :
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
7 முதல் 8 -ஆம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.9 முதல் 10 வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.11.-ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும்.