மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தல்.
தமிழகத்தில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகின்றனர். தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்றும் குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் நடைப்பெறவுள்ளது.
இத்தேர்விற்கான வினாக்கள் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத் திட்டத்தில் (priority syllabus – குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும் என்றும் பாடத்திட்ட விவரங்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…