ஜெயலலிதா நகைகளை தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டாம்.. பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
Jayalalitha – மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கானது நீண்ட வருடங்களாக பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில், முதலில் தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்டார் . அதன் பிறகு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
Read More – மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி.. 2 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 51 விருப்ப மனுக்கள்…
பின்னர், மீண்டும் சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வெளியானது, அதில், சொத்துகுவிப்பு வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலாலிதா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதால், ஜெயலலிதாவின் நகைகள் வழக்கு நடைபெற்ற கர்நாடக கருவூலத்தில் உள்ளது. வழக்கு நடத்த ஏற்பட்ட செலவுக்காக நகைகளை ஏலமிட பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
Read More – SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!
இந்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தீர்ப்பு வெளியானது. மார்ச் 6 , 7 தேதிகளில் பலத்த பாதுகாப்புடன் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் கொடுக்க கூடாது எனவும், அதில் தங்களுக்கு உரிமை உள்ளது எனவும் ஜெயலலிதாவின் உறவினர்கள் ஜெ.தீபா, தீபக் ஆகியோர் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
Read More – பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்றம் , ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை மார்ச் 26ஆம் தேத்திக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதற்குள் இந்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.