கழுகுமலை அருகேயுள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சரஸ்வதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான சங்கர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி, குழந்தைகளை அடித்து உதைத்தார். இந்நிலையில் நேற்று குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த இரும்பு கம்பியால் சரஸ்வதியின் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் கழுகுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தார்.
குடிக்க பணம் கொடுகாததால் இரும்பு கம்பியால் அடி!
The wife was beaten by the refusal to give money to drink