கடந்த மாதம் 24-ம் தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டு அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்சென்று க.அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அன்பழகனின் உடல் ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என கூறினார்.