வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தகவலை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வேளையில் தீவிர கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.