#BIGBREAKING: கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஐந்தாவது நாளான இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி இதனை அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடனை ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025