விவசாயிகளை சந்திக்க பாஜக தலைவர் 3 நாள் சுற்றுப்பயணம்..!

Murugan 3-day tour to meet farmers. he is said to have raised awareness among farmers about the benefits of agricultural laws.

விவசாயிகளை சந்திக்க தமிழக பாஜக தலைவர் முருகன் மூன்று நாள்  சுற்றுப்பயணம்.

நாளை முதல் 21-ஆம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவர் சுற்று பயணத்தின் போது வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் விவசாயிகளும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தயுள்ளார் என கூறப்படுகிறது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 23-வது நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு பல அரசியல் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.