தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேற்பார்வை குழு அறிவிப்பு.!

Announcement of the BJP Oversight Committee headed by Tamil Nadu BJP leader L Murugan for the Tamil Nadu Assembly elections.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேற்பார்வை குழு அறிவிப்பு.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேற்பார்வை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதனை பாஜகவிற்கு முக்கிய தேர்தலாக நினைத்து பணிபுரிகிறோம் எனவும் மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். மேலும் இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அமர்ந்திருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.