பாஜகாவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.!

Kalyanraman of the BJP, who was arrested in a case of slandering the Prophet, was imprisoned under the Gangs Act.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகாவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்தில் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்ததை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

இதையடுத்து, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் மீது 4 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கைதான கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.