பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு தலா ரூ50 ஆயிரம் வழங்க வேண்டும் . அரசு தென்னை பண்ணைகளில் இருந்து, விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும்.மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ25 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்காவிட்டால், பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.