unknown node
கோயம்புத்தூர்; விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியா என்ற விமானம் , ஓடுதளத்தில் பறந்து வந்த மயில் மீது மோதி விமானம் சேதம் அடைந்தது. இந்த விபத்தையடுத்து,விமானி பயணிகளை பத்திரமாக தரை இறங்கினார். ஷார்ஜா செல்ல வேண்டிய இந்த விமானத்தில் 163 பயணிகள் இருந்தனர்.தற்போது இந்த பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கபட்டு உள்ளனர். விமானத்தை சரிசெய்ய, சென்னையில் இருந்து தொழில்நுட்ப குழு கோவை விரைந்துள்ளது.