#BREAKING: 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம்.!

The deep depression formed in the Bay of Bengal is moving at a speed of 13 km. In this condition, Puravi storm develops in 12 hours

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், 12 மணி நேரத்தில் புரேவி புயல் உருவாகிறது.

வங்கக் கடலில் கன்னியாகுமரியில் இருந்து 860 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

இலங்கை திரிகோணமலையில் இருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இதனால், இலங்கை கடந்த பிறகு டிசம்பர் 4-ஆம் தேதி குமரி-பாம்பன் இடையே புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதித கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.