மதுரையில் அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.
நேற்று நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாவட்டத்தோறும் அங்கு இருக்க கூடிய முதன்மை கல்வி அதிகாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்த்துள்ள நிலையில், நேற்று 38 மாவட்டங்களில், பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய 19 கல்வி அலுவலர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சேதமடைந்த அடையாளம் காணப்பட்டுள்ள 120 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 80 கழிவறை கட்டங்களை இடிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மதுரையில் அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…