#BREAKING : விமான சேவை அதிகரிக்க வேண்டும்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் வலியுறுத்தி

Jyotiraditya Scindia and cm stalin

டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள்ளார்.

அந்த கடிதத்தில் “தற்போது சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை என்றும், 2019 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA) சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியதாகவும். கொரோனா தொற்றுநோய் காலத்தில் இது நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டு இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும், நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகியுள்ளதாகவும். சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும் கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான இணைப்பை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் சிங்கப்பூர்-மதுரை இடையே விமானங்களின் எண்ணிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தினசரி விமானமாக அதிகரிக்க வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை முன் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாக்கு கடிதம் எழுதியுள்ளார்.

unknown node