#BREAKING: 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.!

The Met Office has forecast heavy rains in 9 districts of Tamil Nadu due to atmospheric circulation

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தென் மாவட்டமான தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

அந்த வகையில், ராமநாதபுரம்,விருதுநகர்,நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கும் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், ராமநாதபுரம், குடவாசலில் தலா 6 செ.மீ, ராமேஸ்வரம், பாம்பன், கொள்ளிடத்தில் தலா 5 செ.மீ. மழை பதிவு செய்யப்ட்டுள்ளது.