#BREAKING: கொரோனா தடுப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

With corona infection diagnosed in school students, Chief Minister Mk Stalin is being consulted.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், ஊரடங்கு 15ம் தேதியுடன் முடியும் நிலையில், ஊரடங்கு நீடிப்பதா அல்லது கூடுதல் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், 1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பது குறித்தும் முடிவு எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.