கோவை வெள்ளலூர் பேரூராட்சியின் திமுக,அதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக,வெள்ளலூர் பேரூராட்சியில் 8 வார்டுகளில் அதிமுகவும்,7 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றிருந்த நிலையில்,வெள்ளலூர் பேரூராட்சி தலைவர்,துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலின்போது அதிமுக,திமுக இடையே ஏற்பட்ட தகராறில் வாக்குப்பெட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டது.இதன் காரணமாக மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில்,திமுக கவுன்சிலர்கள் 7 பேர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் உட்பட மொத்தம் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அதிகாரி பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில்,கவுன்சிலர்கள் மீது போத்தனூர் காவல்நிலையத்தில் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…