#BREAKING: குப்பை கொட்ட கட்டணம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு ..!

Chennai Corporation Commissioner Prakash said that the Tamil Nadu Chief Minister has been suspended indefinitely as per their instructions.

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட இந்த திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர்களின் பயனாளர் கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என சமீபத்தில் சென்னை மாநகராட்சியால்  அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்திவைக்க வேண்டும் என பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நல சங்க பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். எனவே சென்னை மாநகராட்சி அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணத்தை தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும் , வணிக இடங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.7500 வரையும் , உணவு விடுதிகளில் ரூ.300 முதல் ரூ.3,000  வரையும் , திரையரங்குகளில் ரூ.750 முதல் ரூ.2,000 வரையும் , பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையும், மருத்துவமனைகளில் ரூ.2000 முதல் ரூ.4,000 வரையிலும் கட்டணம் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.