#Breaking: குடியாத்தம் திமுக எம்.எல் .ஏ காலமானார்..! 2 நாட்களில் 2 திமுக எம்எல்ஏக்கள் மரணம் .!

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.

வேலூர் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் நடைபெற்ற  இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில்  வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் தேர்வானார்.

கடந்த இரண்டு நாட்களில் இரண்டு திமுக எம்எல்ஏக்கள் உயிரிழப்பு.இவர் சில மாதங்களுக்கு முன்பாக இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் உடல்நலக்குறைவால் இருந்து வந்த  காத்தவராயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று  காலமானார்.

இந்நிலையில் நேற்று   திருவொற்றியூர்  திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி  உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் சட்டப்பேரவை திமுக பலம் 98 குறைந்துள்ளது