#Breaking : செங்கல்பட்டில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ...!

Holidays have been declared for schools and colleges in Chengalpattu tomorrow due to heavy rains.

கனமழை காரணமாக செங்கல்பட்டில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தொடர்ந்து செங்கல்பட்டிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.