#Breaking : நாளை 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ...!

Holidays have been declared for schools and colleges in 6 districts including Thoothukudi and Kanchipuram tomorrow.

தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.