#Breaking : கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம்!

The High Court has directed the corporation and municipal commissioners to provide that human beings are not used to dispose of waste.

கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என  மாநகராட்சி,நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்வதில் மனிதர்களே பயன்படுத்துவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள், மனித கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

ஆனால், தற்போது பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதில் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுவதாக தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இந்நிலையில், கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.