#BREAKING: மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

- மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.
- மறைமுக தேர்தலுக்கு எதிரான திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழக அரசு மேயர்,நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது.இந்த மறைமுகத் தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்தார்.
அவரது வழக்கில்,மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது .இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அதில்,மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்டவிரோதம் அல்ல என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.மேலும் தன்னை குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சட்டப்படியான உரிமை,அடிப்படை உரிமை அல்ல என்றும் தெரிவித்தது.பின்னர் திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025