#BREAKING: நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் – தீர்மானம் நிறைவேற்றம்!

Resolution at the All-Party Meeting as to whether legal action should be taken to obtain exemption from NEET examination.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்.

நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தது. நீட் விலக்கு பற்றி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது பேரவை மாண்பை சிதைப்பதாக உள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான உரிமையை மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பறித்துவிட்டது. நீட் நுழைவுத்தேர்வு பள்ளிக்கல்வியை அர்த்தமற்றதாக ஆக்குகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு, வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு சாதகமானது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து டுத்தகாத சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தீர்மானத்துக்கு, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜகவை தவிர மற்ற 12 கட்சிகளும் நீட் விலக்கிற்கு ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், நீட் விலக்கு குறித்து தமிழக ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சரை மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை அனைத்துக்கட்சிகள் சார்பில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.