#BREAKING: மேலும் புதிய கட்டுப்பாடு? – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

Chief Minister advised on imposing additional restrictions as corona infection is on the rise again.

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வரும் 10-ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அதனை கடுமையாக்க பரிசீலனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரவுநேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கடைநேரம் குறைப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தவிர, கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.